நடுவானில் பயணியின் மோசமான செயலுக்கு இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்நிலையில் நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தனது இருக்கை மீது ஏறினார்.
பின்னர் தனது இருக்கையை பின்பக்கமாக எட்டி உதைத்தார். ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக அவருடைய இருக்கையை தொடர்ந்து உதைத்தார்.