கனடாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்திலேயே இவ்வாறு பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை வேதளையிலும் மாலை வேளையிலும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம், தாழமுக்க நிலை காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும் இந்த நிலையில் வாகனங்களில் போக்குவரத்து செய்வதும் சிரமமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
அதனால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்றும்,
பாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் மெதுவாக வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொரென்றோ, யோர்க், பீல் மற்றும் வடக்கு நயகரா பிராந்தியங்களில் கூடுதலாக இந்த நிலைமையை அவதானிக்க முடியும் எனவும் கனடிய சுற்றாடல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாலை வேளையில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானியல் ஆய்வாளர் நடாஷா ரமேஷாயி கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத் தக்கது.