கேன் தண்ணீரில் உள்ள ஆபத்துக்கள்!

Must read

மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது.

இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் சென்னை பல்கழைக்கழகம், அண்ணா பல்கழைக்கழகம், மற்றும் சென்னை IIT-M ஆகிய மூன்று இணைந்து கேன் தண்ணீர் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பிரபலமான நிறுவனங்களின் கேன் தண்ணீரை ஆராய்ச்சி செய்து இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் விற்கப்படும் கேன் தண்ணீரில் சோடியத்தின் அளவு லிட்டருக்கு 14 மி.கி மட்டுமே இருப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.

ஆனால் குடிநீரில் லிட்டருக்கு 78 மி.கி இருக்கவேண்டும் என்று தேசிய ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

சோடியத்தின் குறைப்பாட்டால் வயிற்றுப்போக்கு, வாதம், இதயநோய், அட்ரினல் சுரபிகளில் பிரச்சனை ஏற்படும் என மருத்துவ அறிக்கையில் கூறப்படுகின்றது.

அதேபோல் லிட்டருக்கு 188 மி.கி கால்சியம் தேவைப்படுகின்ற நிலையில் கேன் தண்ணீரில் லிட்டருக்கு 3.5 மி.கி கால்சியம் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது.

கால்சியம் குறைப்பாட்டினால் ஹைப்போ கேல்செமியா, பல் நோய், எலும்புகளில் வலு குறைவு, ஆகிய நோய்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை திவிர லிட்டருக்கு 63 மி.கி மெக்னீசியம் தேவைப்படுகின்ற நிலையில் கேன் தண்ணீரில் லிட்டருக்கு 2 மி.கி மட்டுமே உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.

மெக்னீசியம் குறைப்பாட்டினால் சிறுநீரகத்தில் கற்கல்கள் உருவாகுதல், என்ற பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article