கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

Must read

கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

நவம்பர் 21 முதல் மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 27 துயிலும் இல்லங்களில் மாலை 6.05 இடம்பெறும் சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிறைவுபெறும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article