





‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடக நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான விமல் தவராஜா அவர்கள் தலைமையில் இயங்கிவரும் குழுவில் நண்பர் செல்வன் உட்பட பலர் அடங்கியுள்ளமையும் அவர்களின் தொடர்ச்சியாக பங்களிப்புக்கள் மூலம் தான் ‘அனலை எக்பிரஸ்’ ஊடக நிறுவனம் இவ்வாறான சாதனைகளை தொடர்ச்சியாக படைக்க முடிகின்றது என்பதும் யதார்த்தமாகின்றது.
அன்றைய நிகழ்வில் கனடாவின் பல நகரங்களிலும் இயங்கிவரும் இசை நடன மற்றும் வாத்திய இசை திரை இசை. போன்ற துறைகளில் மாணவ மாணவிகளுக்கு வகுப்புக்களை நடத்தும் கலைசார்ந்த நிறுவனங்களின் மாணவ மாணவிகள் மேடையில் தங்கள் அற்புதமாமன படைப்புக்களை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ஒன்றாரியோ மாகாண வீடமைப்புத் துறை இணையமைச்சரும் ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான விஜேய் தணிகாசலம் அவர்கள் விழாவிற்கு ஆதரவு வழங்கிய வர்த்தகத்துறை சார்ந்தவர்களையும் ஊடக நிறுவனங்களின் நிறுவனர்களையும் பிரதம ஆசிரியர்களையும் ‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடக நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான விமல் தவராஜா அவர்கள் மற்றும் நண்பர் செல்வன் சகிதம் மேடையில் கௌரவித்தார்.
மொத்த்தில் அன்றை ‘பாரம்பரியம்’ விழா முழு நீள தமிழர் விழாவாக இந்த மண்ணின் பெருமைகளை எடுத்து வந்தது என்பதும் மிகவும் இசைவானது.—————சத்தியன்- Photo Credits to Gana Arumugam and GTA Media Ganga