விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக கனேடிய நிறுவனம் அறிவிப்பு

Must read

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் எயார் கனடா விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எயார் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

வட. அமெரிக்கா மற்றும் சன் மார்க்கெட் பயணிகளுக்கு முதலில் இச்சேவை வழங்கப்படவுள்ளது.

கனடாவில் உள்ள விமான பயணிகளுக்கு இலவச Wi-Fi சேவை - தமிழ்வின்

இந்த இலவச WiFi சேவையைப் பெற அப்பயணிகள் அரோபிளான் Aeroplan உறுப்பினராக இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரோபிளான் உறுப்பினராக இல்லாத பயணிகள் இந்த சேவையை குறைந்த கட்டணத்தில் வாங்கி பயன்படுத்தலாம்.

ஆரோபிளான் உறுப்பினர் ஆக விரும்புபவர்கள் இலவசமாக பதிவு செய்ய முடியும்.

இந்த WiFi சேவை ஸ்ட்ரீமிங் தரத்துடன் வழங்கப்படும் என்றும் இதனால் தொழில்துறையும் பொழுதுபோக்கும் பயணிகளுக்கு வசதியாக என்றும் எயார் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டு வரை இந்த சேவையை நீண்ட தூர சர்வதேச விமானங்களுக்கும் விரிவுபடுத்த எயார் கனடா திட்டமிட்டுள்ளது.

ஜூலை மாதம், வெஸ்ட்ஜெட் நிறுவனமும் இதேபோல் தங்களது சில விமானங்களில் Starlink நவீன செயற்கைக்கோள் இணையத்தின் மூலம் இலவச WiFi சேவையை அறிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article