ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு, யாழ். எம்.பீ ஒருவர் பெரும் தலையிடியக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்களை வெளிகொண்டு வந்தமையின் மக்கள் மத்தியில் பிரசித்தமடைந்தது பாராளுமன்றம் தெரிவானவர் வைத்தியர் அர்ச்சுனா.
இவர் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கடசித் தலைவர் சஜித்தின் ஆசனத்தில் அமர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இவ்வாறிருக்க இவர் தற்போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை கடவுள் என்று கூறி தெற்கு அரசியல் நிலவரங்களை பரபரப்பாக்கியுள்ளார்.
இதனால் இனவாத பேச்சுக்களுக்கே இடமில்லை என்று கூறும் அநுர அரசுக்கு இவரின் செயற்பாடுகள் கடும் தலையிடியாக அமையும் என்று கூறப்படுகிறது.