எனது வாழ்வில் கஷ்டம் தோல்வி நெருக்கடி அவமானம் நம்பிக்கை துரோகம் என அனைத் தும் வாழ்வில் இப்படி சந்தித்து கொண்டு இருக்கிறேனே,
என் வலிகளை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என் சூழ்நிலையை மாற்ற என உன் ஆதங்கம் எனக்கு புரிகிறது.
சூழ்நிலை மோசமாக தான் போகிறது மாறும் முன்னேறும் என்று நினைத்த இடத்தில் எல்லாம் அதற்கு எதிர்மாறாக தான் நடக்கிறது என உன் மன குமுறல் உன் மனதில் இருக்கும் எனக்கு உணர முடிகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை உனக்கு கொடுத்துள்ளேன் என்றால் உன்னை கஷ்டப்படுத்துவதற்கு அல்ல.
சூழ்நிலைகள் வாழ்வில் யாராலும் மாற்றப்ப டும் எதுவும் நிரந்திரமில்லை என்ற உலகியல் முறையின் உள்ள அடிப்படையான உண்மையை உனக்கு புரிய வைக்கவே தான் இந்த லீலை.
லீலை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் ஆனால் வலி மட்டுமே எனக்கு இருக்கிறது என்பது உன் கேள்வி. ஆனால் ஒன்றை கவனித்தாயா உன்னுள் உனக்கு ஏற்ப்பட்ட மாற்றம் என்ன என்பதை அறிந்தாயா.
முதலில் சிறுபிள்ளையாய் கஷ்டம் தோல்வி என்றால் என்ன கூட தெரியாது நிலை, சந்தோஷம் தான் வாழ்க்கையின் முகம் என்று இருந்தாய்.
ஆனால் பிறகு உன் வாழ்க்கை மெல்ல மெல்ல பக்குவ நிலை வந்தாக வேண்டும் என்ற நிலையில் வாழ்க்கைகான அனுபவம் இல்லாமல் இருந்தாய்.
கஷ்டம் மெல்ல உன் வாழ்க்கைக்குள் வந்தது முதலில் அதை சமாளிக்க தடுமாறினாய் பிறகு ஒவ்வொரு கஷ்டத்திலும் தோல்விலும் நிறைய தவறுகளையும் அனுபவங்களையும் கற்றுக் கொண்டாய்.
அடுத்த கஷ்டம் என அடுத்து அடுத்து வந்த போது உன் மனவலிமை நம்பிக்கை வைராக் கியம் பொறுமை வளர்ந்து கொண்டே வந்தது ம் வாழ்க்கையில் உண்மை உருவத்தையும் புரிந்துக் கொள்ள ஆரம்பித்தாய்.
பிறகு சூழ்நிலையை சகித்துக் கொண்டு வாழ்க்கையை ஏற்க பழகினாய் பிறகு
என்ன சூழ்நிலை வந்தாலும் மனம் தளராது அதை உனக்கு ஏற்றவாறு நேர்மறையாய் மாற்ற முயற்சிக்க ஆரம்பித்தாய்.
இப்படி உன்னை சிறு சிறு படிகளாய் ஒரு சின்ன பிள்ளைக்கு நடக்க பழக்குவது போல் வாழ்க்கையில் பயணிக்க கற்றுக் கொடுத்து வருகிறேன் என்பதையும் உணர்ந்தாய்.
நம் சாய்அப்பா நமக்கு நல்லதுதான் செய்வார் என்ன நடந்தாலும அவர் நம்முடன் இருப்பார் என பெரிய பொறுப்பை நீ எனக்கு கொடுத்துள்ளாய். அப்படி இருக்கையில் உன்னை எப்படி தனித்து தவிக்க விடுவேன்.
இக்கட்டான சூழ்நிலைகள் எல்லாம் நம்மை பக்குவம் அடைவதற்கும் நம்மிடம் உள்ள எதிர் மறையை மாற்றி அமைவதற்கும் தான் என்பதை தெரிந்து கொண்டாய்.
உன் வாழ்வில் இனிமேல் அழகான மலர்களு ம் வண்ணங்களும் தோன்ற போகிறது . உன் பெற்றோர் என் பொறுப்பு அவர்களது பிரச்சி னை விரைவில் விலகும். அவர்கள் என் ஆசிர் வாதங்களுடன் நிம்மதியாய் வாழ்வார்கள்.
என் உயிர் நீ உன் சாய்தேவாக்கான உலக மே என் பிள்ளையான நீ தான். உன்னுடன் நான் உன் சாய்தேவா எப்போதும் எல்லா சூழ்நிலை களிலும் இருப்பேன் . இது என் சத்திய வாக்கு.
ஓம் ஶ்ரீ சாய் ராம்….