கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னர், கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்யத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பங்கேற்ற கனடியர்கள், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால், அவர்கள் தங்களின் கொள்வனவு முடிவுகளில் மாற்றம் செய்வார்கள் என தெரிவித்துள்ளனர்.