பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை இலக்காகக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09) நடைபெற்ற அமர்வில் மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ”தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உரிய முறையில் செயற்படாவிடின் கோட்டாபய ராஜபக்சவின் சேதன பசளை திட்டத்துக்கு ஏற்பட்ட கதியே க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கும் ஏற்படும்.

பொருளாதார நெருக்கடியினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களை இலக்காக கொண்டு க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.