அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Must read

அவுஸ்திரேலியாவின் மெல்பேனில் இலங்கைப் பெண்ணான நிலோமி பெரேரா, இலங்கையைச் சேர்ந்த அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் திகதி மெல்பேன் சான்டேஸ்ட் என்ற இடத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு முன்னால் வைத்து தனது முன்னாள் மனைவியை இவர் மோசமாக தாக்கியுள்ளார்.

இதன்போது தலை,முகம் கழுத்து பகுதியில் மோசமான தாக்குதலுக்கு இலக்கானார்.இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து முன்னாள் கணவரான டினுஷ் குரேரா தனது முன்னாள் மனைவி மீது கத்தி மற்றும் கோடரியை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் 2021 இல் பிரிவதென தீர்மானித்துள்ளனர்.இதனையடுத்து அந்த ஆண்டில் டினுஷ் குரேரா  இலங்கைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் டிசம்பர்03, 2022 அன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி கோடரி, கத்தி மற்றும் எரிபொருள் கானுடன் வீட்டின் பின்வேலியை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் இவர் குற்றவாளி என கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு விக்டோறியா நீதிமன்றம் 37 வருடங்கள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இவர் 30 ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்படுவார். தற்போது அவருக்கு 47 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article