இலங்கைக்கு கரம் கொடுக்க கனடா இணக்கம்

Must read

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ்  (Eric Walsh)  தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே கனடிய உயர்ஸ்தானிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துன் பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயரஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article