தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை. ஆனால் மதிப்பளிக்கிறோம் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) ஆற்றிய கன்னி உரையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்டாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்க தயாரெனவும் கூறியுள்ளார்.
இலங்கையை பொறுத்த வரையில் சிறுபான்மையினர் ஏனைய மக்களுடன் சமனாக நடத்தைப்படவில்லை என்ற எண்ணமே இருந்தது. அதனால் நாட்டின் தேசியகீதத்தையும் தேசியக்கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை, ஆனாலும் அவற்றுக்கு மதிப்பளிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளதாகவும், தான் விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக் கொடியையும் எனது வாழ்க்கைக் காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.