இலங்கையில் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்தெரிவித்துள்ளார்.
தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மைய அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அண்மைய நாடாளுமன்றத் தேர்தல்களின் நம்பமுடியாத முடிவுகள் கனடாவில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதில் ஆச்சரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஏனைய காலங்களை காட்டிலும், முக்கியமான விடயங்கள் இடம்பெறும்போது, கனேடிய ஊடகங்கள் இலங்கையை போன்ற நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று டேவிட் மெக்கின்னன் வலியுறுத்தியுள்ளார்.
Some thoughts on the extraordinary results in last week's parliamentary elections in #SriLanka.
For whatever reason, @CBCNews did not seem to think it worthy of any coverage, but Canadians interested in the world might think otherwise. https://t.co/O4xhyAnQlf
— David McKinnon (@McKinnonDavid) November 18, 2024