இலங்கையில் வீட்டு வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்! அண்ணாச்சி டன்ஸ்டன் மணி

Must read

இலங்கையில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை மிக அதிகளவில் காணப்படுகின்றது. கணவன், மாமனார், மாமியார் என வீட்டில் உள்ளவர்களால் பெண்கள் அதிகளவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். சில வீடுகளில் பெண்கள் பெண்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர்.

குடும்பங்களில் உள்ள சிறார்களின் நலன் கருதி குடும்ப வன்முறையை நிறுத்துவதற்கேற்ற வகையிலான கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜுடம் சர்வதேச ஊடகப் பேரவைத் தலைவர் டன்ஸ்டன் மணி கோரிக்கை விடுத்துள்ளார்

நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களினதும் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசு குடும்பங்களில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை நிறுதுத்துவதற்கு உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் குடும்பங்களில் இடம்பெறும் வன்முறைகள் அக்குடும்பச் சூழலில் வளரும் சிறார்களை பெருமளவில் பாதிக்கின்றது. மட்டுமன்றி அவர்களை உளரீதியாகவும் பாதிக்கின்றது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் டன்ஸ்டன் மணி கோரியுள்ளார்.

அனேக குடும்பங்களில் தமது உறவினர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழி தெரியாமல் பரிதவிக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக உடனடி நிவாரணம் பெறும் வகையில் உடனடி தொலைபேசி இலக்கமொன்றும் அறமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறான தொலைபேசி இலக்கமொன்று இன்றைய காலத்தின் தேவையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article