தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல பட்டப்படிப்பை முடித்திருந்தால் நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி சவால் விடுத்திருந்தனர்.
சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அசோக ரன்வல அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென கூறியுள்ளார்.
அத்துடன் தான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் ஜப்பானில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
தமக்கும் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தற்பொழுது பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.