இளம் பெண்ணை வைத்தியர் பரிசோதனை செய்த போது ரகசியமாக எட்டிப் பார்த்த நபர்!

Must read

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போது உதவி தாதிய பொறுப்பாளர் இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் பொதுவாக நோயாளி ஒருவரை வைத்தியர்கள் உடல் பரிசோதனை செய்யும் வேளையில் அவர்களது சுய உரிமையை பேணும் வகையில் உறவினர்கள் யாரையும் அருகில் அனுமதிப்பதில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், பெண் நோயாளி ஒருவரை பெண் வைத்திய நிபுணர் ஒருவர் உடல் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த நபரை உடனடியாக வெளியேமாறு வைத்திய நிபுணர் கூறியும் வெளியே செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்ததால் சிறிது நேரம் விடுதிக்குள் குழப்ப நிலை நிலவியதாக தெரிய வருகின்றது.

குறித்த நபர் தனது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையை இது எவனுக்கு பிறந்ததோ என கேட்டு வைத்தியசாலை முழுவதும் பேரும் அதிர்வலைகளை ஏற்படுத்திருந்தது.

இதன் காரணமாக இவரது மனநிலை மற்றும் கீழ்தரமான சிந்தனைகளை உணர்ந்த பலர் இவன் மீது ஏன் காலை வைக்க என்று விலகி செல்வதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, பெறுமதியான பல சத்திர சிகிச்சை உபகாரணங்கள் களவு போனமை, குப்பைக்குள் ஏறியப்பட்டமை தொடர்பாக குறித்த நபருக்கு தொடர்புகள் உள்ளதாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article