ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழில் நினைவேந்தல்

Must read

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன.

இன்றையதினம் (21-04-2024) தேவராதனையின் போது தமது தியாகங்களை இன் உயிராக்கியவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டது.

தேவாலய பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.

இதில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article