ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது குறித்து அவரது மனைவி சாய்ரா பானு முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்குக் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை.
அதன் காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை.
இதனாலேயே ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்சக் காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரைப் பார்க்க முடியாது.
எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் உடல்நிலை காரணமாகத் தான் இந்த பிரிவு.
ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன்.சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன்.
அவர் பெயருக்குத் தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.அவர் மிகச்சிறந்த மனிதர்.
இவ்வாறு சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.