அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர்.
விமானம் கசகஸ்தான் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் நிலவியுள்ளது. இதனால், விமானத்தை கசகஸ்தானில் உள்ள அக்டாவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது திடீரென விமானத்தின் மீது பறவைகள் மோதியுள்ளன.
இதையடுத்து, விமானத்தை வேகமாக தரையிறக்க விமானி முயற்சித்துள்ள போது எதிர்பாராத விதமாக விமானம் திடீரென கிழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்ததோடு மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.