கட்டுநாயக்க விமானத்தில் கைதான இளைஞன்

Must read

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (10.4.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு

கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இவர் போலி கடவுச்சீட்டை தயாரித்து மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article