கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிப்பு

Must read

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் அமுலுக்கு வரும் இந்த மாற்றத்தின் படி, வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் (no extra points for job offers) இனி வழங்கப்படாது.

இச்செயல்முறை மாற்றத்தின் மூலம், LMIA (Labour Market Impact Assessment) ஆவணங்களை சட்டவிரோதமாக வாங்குவது அல்லது விற்பனை செய்வதை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது. இது வெளிநாட்டவர்களின் தேர்வில் முறைகேடுகளை தடுக்க உதவும்.

LMIA என்பது கனடிய தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாத பணிகளுக்கு வெளிநாட்டவர்களை நியமிக்க தேவையான ஆவணமாகும்.

இதனால், எக்ஸ்பிரஸ் என்ட்ரி மூலம் நிரந்தர குடியுரிமை பெறும் விண்ணப்பதாரர்களின் வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவம் குறைக்கப்படும்.

இந்த மாற்றம் கனடாவில் தற்காலிகமாக வேலை செய்து வரும் வெளிநாட்டவர்களையும் பாதிக்கும்.

ஆனால், இதுவரை வேலையொப்பத்துடன் விண்ணப்பித்தவர்கள் அல்லது அழைப்பு பெற்றவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்.

இந்த மாற்றம், எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறைமையில் உள்ள ஆவண முறைகேடுகளை குறைத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் நியாயத்தன்மையை மேம்படுத்தும் என கனடா அரசு நம்புகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article