கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தகவல்கள் கசிவு

Must read

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

செவ்வாயன்று அந்த இளைஞரின் உடற்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அவரது பெயர் குராசிஸ் சிங் (22) என்றும், அவர் இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக கனடாவுக்கு வந்தவர் என்பதும், Lambton கல்லூரியில் அவர் படித்துவந்தார் என்பதும் தெரியவந்தது.

அவரை கொலை செய்ததாக, அவருடன் தங்கியிருந்த கிராஸ்லீ ஹண்டர் (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் சமையலறையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபத்தில் ஹண்டர் என்பவர் சிங்கை கத்தியால் குத்தும் நிலைக்குச் முறுகல் வலுவடைந்துள்ளது.

பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார்.

இதற்கிடையில், இது இனவெறுப்பு காரணமாக நடந்த கொலை அல்ல என்று கூறியுள்ள பொலிசார் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article