26 வயது பெண் ஒருவர் தனது பயணப் பொதியில் சுமார் 62 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ரோயல் கனேடிய மவுண்டட் பொலிசார் (RCMP) அறிவித்துள்ளனர். இதன் மதிப்பு 2,48,000 கனடிய டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கஞ்சா இறக்குமதி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் வரை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என RCMP தெரிவித்துள்ளது.
கனடாவில் கஞ்சா பயன்பாடு சட்டரீதியாக இருந்தாலும், கஞ்சாவை சர்வதேச விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், பயண தேவைக்கு மீறிய அளவு உள்நாட்டு விமானங்களிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக RCMP பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல், தடைசெய்யப்பட்ட பொருட்கள் உடமையானது அல்லது விற்பனை தொடர்பான தகவல் அறிந்தவர்கள் பொலிசாரைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.