கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் மீட்பு

Must read

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியிலேயே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வாகன கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் மீட்பு | Vehicles Stolen From Gta Worth 4M Recovered

களவாடப்பட்ட வாகனங்கள் உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article