கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் வடக்கு பகுதியில் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் கிடைத்த பகுதியில் நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல் துலக்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு கொதித்து ஆறிய நீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய வீட்டு தேவைகளுக்கு கொதிக்க வைக்கப்படாத நீரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நீர் விநியோக தடை விரைவில் நீக்கப்படும் எனவும் இந்த அறிவுறுத்தல் விரைவில் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.