கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கான செய்தி!

Must read

கனடாவின்(canada) புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது 2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கட்டண உயர்வானது கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி (IRPR) அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

நிரந்தரக் குடியிருப்பு அனுமதி
அந்த வகையில், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 515 கனேடிய டொலர்களிலிருந்து 575 டொலர்களாக உயரவுள்ளது.

இதேவேளை பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள், மாகாண நாமினி திட்டம், கியூபெக் திறன்மிகுப் பணியாளர் திட்டம், அட்லாண்டிக் புலம்பெயர்தல் வகுப்பு முதலான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவருக்கான கட்டணம் 850 டொலர்களிலிருந்து 950 டொலர்களாகவும், விண்ணப்பிப்பவரின் கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 850 டொலர்களிலிருந்து 950 டொலர்களாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான விண்ணப்பம் 230 டொலர்களிலிருந்து 260 டொலர்களாக உயர்வடைய உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article