மத்திய அரசின் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் இருந்து, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் (பெப்ரவரி 15ஆம் தேதி வரை) இந்த வரி விடுமுறை திட்டம் நடைமுறையில் இருக்கும். இதன் மூலம், நாட்டில் உள்ள வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க வாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இலவசத்தில் அடிப்படை மளிகை பொருட்கள்,பழங்கள், மரக்கறிகள், பால் உற்பத்திகள், இறைச்சி வகைகள், கால்நடை உற்பத்திகள், முட்டைகள் போன்றவற்றுக்கு பெறுமதி சேர்வரியும், மேலும் சாண்ட்விச், சலாட் வகைகள், பேக்கரி தயாரிப்புகள், சமைத்த உணவுகள் போன்றவற்றிற்கான வரிகளும் குறைக்கப்படுகின்றன.
மேலும், அல்ஹகோல் இல்லாத பானங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.