கனடா சுற்றுலா வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Must read

கனடாவில் (Canada) விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்டு கால வீசா அனுமதி வழங்கப்படாது எனவும் ஒவ்வொரு விண்ணப்பதாரியின் விண்ணப்பங்களும் தனிப்பட்ட ரீதியில் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வீசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், என்ன காரணத்திற்காக அவர்கள் வருகை தருகிறார்கள், அவர்களது நிதிநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article