கனடாவின் மத்திய மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்குள் வாகனத்தை மோதச்செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
நகையகத்தில் கொள்ளையிடுவதற்காகவே திட்டமிட்டு வாகனத்தை மோதச் செய்திருக்கலாம் என்றும், சந்தேக நபர்களைதேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தார்.
மிசசாகாவின் எக்லிகன் அவென்யூவில் அமைந்துள்ள நகையகம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. குறித்த வாகனம் சம்பவ இடத்திலேயே கைவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் ஊடாக கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வெளியிடவில்லை.