கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கனடிய மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக செயல்படுகிறார்கள்.
ப்ரீலாண்ட், பதவி ராஜினாமாவுக்கு தொடர்பான கடிதம் ஒன்றை வெளியிட்டு, எதிர்வரும் தேர்தலில் ரொறன்ரோ தொகுதியில் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
கனடிய லிபரல் அரசாங்கம் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ப்ரீலாண்ட் பதவி விலகுவது அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.