கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த மாகாணத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடும்போது நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒன்றாறியோ பொது சுகாதார அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த வருடத்துடன் ஒப்பீடும் போது இந்த வருடத்தில் பதிவான நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டுகிறது.
இந்த நோயினால் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப்பை பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நிமோனியா காய்ச்சலை விடவும் இந்த நோய் ஆபத்து குறைந்தது என்றும், இந்த நோய் பாக்டீரியா தாக்கத்தினால் ஏற்படுகின்றது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.