உய்குர் மற்றும் திபெத் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிப்பிட்டு கனேடிய நிறுவனங்கள் மற்றும் 20 கனேடியர்கள் மீது சீனா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்து, மேற்படி நிறுவனங்களினதும் கனேடிய பிரஜையினதும் சொத்துக்கள் முடக்கிக்கு, அவை மீது சீனா தடை விதித்துள்ளது.
இதில் கனடாவில் செயல்படும் உய்குர் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்பு மற்றும் கனடா-திபெத் கமிட்டி ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் சின்ஜியாங்கின் மேற்குப் பகுதியில் சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இஸ்லாமிய சிறுபான்மையினரான உய்குர்களை பரவலாக துஷ்பிரயோகம் செய்வதாக சீனா நிர்வாகம் மீது உரிமைக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் முகாம்களில் உய்குர் மக்களை கட்டாய உழைப்புக்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை சீனா முழுமையாக மறுத்து வருகிறது.
இதனிடையே தடை விதிக்கப்பட்ட இரு நிறுவனங்கள் தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ள தகவலில், சீனாவின் எல்லைக்குள் அவர்களின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் பிற வகை சொத்துக்களை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, சீனாவில் உய்குர் நிறுவனத்தில் 15 பேர் மற்றும் திபெத் கமிட்டியில் உள்ள 5 பேரின் சொத்துக்களையும் முடக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த 20 பேரும் ஹொங்ஹொங் மற்றும் மக்காவ் உள்ளிட்ட சீனாவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுது.