கர்மவினைகளை போக்கும் சித்திரை பௌர்ணமி

Must read

கர்மவினைகளை போக்கும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.

அதுமட்டுமல்லாது இறந்துபோன தந்தைக்காக ஆடி அமவாசை இருப்பதுபோல, தாயாருக்காக சித்திரை பௌர்ணமி நாளில் விருதம் இருப்பது நம் பண்டைய காலம்தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 22 ஆம் திகதி அதாவது இன்று மாலை 5:30 மணிக்கு மேல் பௌர்ணமி திதி ஆரம்பித்தாலும் 23 ஆம் திகதி அதாவது நாளை பகலும் நமக்கு பௌர்ணமி திதியாக வருகிறது.

சித்திரா பௌர்ணமியின் சிறப்புக்கள்
ஜோதிட ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நேர் எதிரில் துலாம் ராசியில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளில் பவுர்ணமி வருவதால், சித்ரா பவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆத்மகாரகனும், மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும்.

புண்ணியங்கள் சேரும். காலையிலேயே நீராடி விட்டு வீட்டை சுற்றிலும் மஞ்சள் நீரால் தெளித்து விட்டு காலையில் உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று 9 முறை நவகிரகத்தை சுற்றிவர பவுர்ணமி அன்று பெறக்கூடிய அனைத்து சக்திகளையும் நீங்கள் பெறலாம்.

வீட்டில் விளக்கேற்றி சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் பாயாசம் போன்றவை படையெடுத்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கலாம்.

கர்மாவில் இருந்து விடுபட சனிபகவான் வழிபாடு
குறிப்பாக சனி பகவான் ஜோதிடத்தில் கருமக்காரனாய் வருகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனியை வைத்து அவரின் கர்மாவை நம்மால் கணித்து விட முடியும். இப்படியான சூழ்நிலையில் ஒருவர் ஜாதகத்தில் சனி நீச்சம் பெற்றாலோ அல்லது நாவாம்சத்தில் நீச்சம் பெற்று இருந்தாலும் அவருக்கான பலன்களை அவர் வாழ்க்கையில் அனுபவித்தே தீர வேண்டும்.

இது மாதிரியான சமயங்களில் குருவின் பார்வை ஒன்று ஐந்து ஏழு ஒன்பது போன்ற ஸ்தானங்களில் இருந்து சனியை பார்த்தால் நிச்சயமாக கர்மாவில் இருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும்.

அப்படி குரு பார்க்கும் சனி கொண்ட ஜாதகர்கள் இதுபோன்று சித்ரா பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருந்தால் உடனடியாக அவர்களது கர்மா தீர்க்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சுப காரியங்களோ நடக்க வேண்டிய நல்லதுகளோ அல்லது பணம் சம்பந்தமான தொழில் சம்பந்தமான வியாபாரம் சம்பந்தமான எந்த ஒரு தடையாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை.

அதுமட்டுமல்லாது சனிபகவானின் வாகனம் காகம் ஆகும். எனவே சித்திரா பௌணமி அன்று காகத்திற்கு அன்னம் இடுவது விசேசமானதாகும்.

மேலும் சித்திரா பௌணமி நாளில் சிவனையும் பார்வதியும் ஒரு சேர இருக்கும் தளங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

எனவே சித்திரா பௌர்ணமி நாளில் விரதமிருந்து வாழ்வில் துன்பங்கள் நீங்கு இன்புற்று வாழ்வோமாக.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article