கூகுள்(Google) நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்துள்ளது.
ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப்(YouTube) வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ அறிவுத்தியுள்ளது.
இருப்பினும் இதனை நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்து
இந்நிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூபா 407 கோடி (49 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.