‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டு வைத்தார்.
அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா, விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஆகியோரிம் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026 இல் மக்களே புறக்கணிப்பாளர்’ என்று தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்தால் நாட்டின் நிலைக்கு குறித்து கவலை மகிழ்ச்சி அடைந்திருப்பாரா என்று கேள்வி எழுப்பிய விஜய், நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாகும். அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையிலே நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.