சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் அதிக மழை பெய்கிறது, இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 2 நாட்களாக கனமழை மற்றும் மூடு பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இருப்பினும் இன்று 3 வது நாளாக மழை அதிகமாக பெய்து வரும் நிலையில், பக்தர்களின் வருகை குறைந்த அளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.