பாபா பக்தர்கள் முதலில் முந்தைய பிறவி மற்றும் கர்மாக்களை தெளிவாக புரிந்து கொண்டு நம்பவேண்டும் . ஏனெனில் எப்போ தும் முந்தைய பிறவி மற்றும் கர்ம வினையை பற்றி அவரது அதிகம் கூறியுள்ளார் .
அவரது சொற்களையே நாம் முழுமையாக நம்பவேண்டும். சகலமும் அறிவார் ஷீரடி சாய் நம் புத்திசாதுரியம் , தவறான சுய பிரபஞ்ச கணிப்பு போன்றவை எல்லாம் வீண் .
கெட்ட செயல் செய்பவன் இப்போது நல்ல முறையில் சுகமாக வாழ்கின்றான் என்றால் அவன் முந்தைய பிறவியில் செய்த நற்கர்மா வின் பயன்களை அனுபவிக்கும் நேரம் அதுவாக இருக்கும்.
நல்லவர்கள் சில நேரம் கடுமையான கஷ்டங் களை அனுபவிக்கிறார்கள் என்றால் அவர்க ளது முற்பிறவியில் செய்த தீய கர்மாக்கள் அது . ஆனால் நன்மை /தீமை செயலுக்கு ஏற்ப விளைவுகள் கட்டாயம் அனைவருக்கும் உண்டு . பிரபஞ்சத்தின் சட்டமும் அதுவே . காரணம் இல்லாமல் காரியம் இல்லை .
மனதால் கூட பிறருக்கு நாம் எப்போதும் தீங்கு நினைக்க கூடாது.
ஓம் ஶ்ரீ சாய் ராம்…
02.12.2024… நேசமுடன் விஜயராகவன்….