சுந்தர்.சி பேய் படங்களாக இயக்க காரணம் என்ன?

Must read

அரண்மனை 4
தமிழ் சினிமாவில் எத்தனையோ புதிய இயக்குனர்கள் வந்தாலும் 90களில் கலக்கியவர்கள் பலர் இப்போதும் வெற்றிகரமாக படங்கள் இயக்கி வருகிறார்கள்.

அப்படி 1995ம் ஆண்டு வெளிவந்த முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சுந்தர்.சி. அதன்பிறகு நிறைய வெற்றிப்படங்களை இயக்கி, நடித்தும் இருக்கும் சுந்தர்.சி தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு அரண்மனை என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்ட இவர் 2016ம் ஆண்டு 2ம் பாகத்தையும், 2021ம் ஆண்டு 3ம் பாகத்தையும் வெளியிட்டு வெற்றி கண்டார்.

அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ பிரதாப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

குஷ்பு பேட்டி
Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media சார்பில் அருண்குமார் தயாரித்து இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

அதில் குஷ்பு பேசும்போது, அவருடன் நான் 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலிமே எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என்று எப்போதுமே யோசித்துக் கொண்டிருப்பார்.

வீட்டில் இருக்கும் எங்களுடைய இரண்டு குழந்தைகளுக்குமே ஹாரர் படம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் அவர் அந்த ஜெனரிலில் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article