பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் குஜராத்தின் சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த தற்கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் சூரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச் பிரிவு தலைவராக செயற்பட்டு வந்த வயதான 34 தீபிகா படேல் 3 குழந்தைகளின் தயாவார்.
எவ்வாறாயினும், அவரது தற்கொலைக்கான காரணம் தற்போது வரையில் அறியப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது செல்போன் அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.