சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இறுதியாக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரஸ் கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஆட்களை தெரிவு செய்ய டிசம்பர் 15 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுமென பாரதிதாசன் அறிவித்தார்.
இந்த நிலையில், மெய்யறிவாளன் , விஸ்வநாதன் ஆகியோர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் தேர்தல் நடைமுறைகளில் தலையிட முடியாது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.