டிரம்ப் நியமித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Must read

அமெரிக்க அதிபரக பதவியேற்றகவுள்ள டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு அந்த அதிகாரிகளுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition- ஆட்சி அதிகாரம் மாறுதல்) செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கேபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல்களை அடுத்து தொடர்ந்து சட்ட அமலாக்க மற்றும் பிற அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக செயல்பட்டனர்.

செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், டிரம்ப் மற்றும் நியமிக்கப்பட்டவர்களும் அவர்களின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக என தெரிவித்துள்ளார்.

அதேவேளை நியூயார்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும்க் இவர் ஐ.நா.வின் அடுத்த தூதராக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article