மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.
விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது.
எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தை டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தைத் தொடர முடிவு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆனால் பாதுகாப்பு படையினரால் தடை போடப்படிருந்த நிலையில், இன்று உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.