தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

Must read

கடந்த சில நாட்களாகவே நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், புத்தாண்டுக்கு பின்னர் இன்றையதினம்(10) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,562 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,930 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,860 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 182,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,820 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 174,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டியார் தெரு விபரம்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article