தடை செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்த கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கரசல் வெர்னோன் மேஜர் என்ற குறித்த நபர் அமெரிக்க கனடியே எல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பிக் கொண்டிருந்தபோதே எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இவரை சோதனையிட்டுள்ளனர். அதன்போது இவரது வாகனத்திலிருந்து சட்டவிரோத ஆயுதம் ஒன்றும், ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டன.
சட்டவிரோதமாக ஆயுதத்தை நாட்டுக்குள் கடத்தியதாக குற்றம் சுமத்தி இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு கனடிய நீதிமன்றம் நேற்றைய தினம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.