தான் தனியொரு குளிரூட்டப்பட்ட அறைக்குள் சட்டக்கல்லூரி பரீட்சையை எழுதியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்தார்.
அவ்வாறு தன்மீது ஆளும் கட்சியினர் சாட்டும் குற்றச்சாட்டினை நிறூபித்தால் தான் பதவி விலகுவதாக அறிவித்த அவர், நிறூபிக்க தவறினால் தன்மீது குற்றம்சாட்டிய அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
நான் தனியறைக்குள் தனியாக பரீட்சை எழுதவில்லை. எனது விடைத்தாளை என்னுடைய தந்தையார் திருத்தவும் இல்லை. எனவே, பொய்யான விடயங்களை பாராளுமன்றத்தில் சொல்லி மக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப வேண்டாமென நாமல் ராஜபக்ஷ எம்.பி வலியுறுத்தினார்.
மேலும், தான் ஒருபோதும் தனது பெயருக்கு முன்பாக தனக்கு கிடைக்காத கலாநிதி பட்டத்தை சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேபோல் இவ்வாறான பொய்களை சொல்வது நாட்டின் சட்டக் கல்லூரியை அவமதிப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றை பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் வசந்த சமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வேளையிலேயே நாமல் ராஜபக்ஷ எம்.பி குறித்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.