ஆட்சிக்கு வரும் போது புதிதாக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவோம் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும்.
அதேவேளையிலே, அதை நிறைவேற்றுவதற்கான இராஜதந்திர நகர்வுகளை இந்தியா மேற்கொள்ளும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அன்றிலிருந்து இன்று வரை சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.