தமிழர் பகுதியில் இடம்பெற்ற கொடூரம் – 2 பிள்ளைகளின் தந்தை பலி

Must read

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்தகுடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article