யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை ரஷ்ய படையில் இணைந்துகொண்டு போரில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக வௌியான செய்திகளை ரஷ்யா மறுத்திருக்கிறது.
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு செல்லவிருந்த தமிழ் இளைஞர்கள் உக்ரைன் உடனான போரில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக வௌியான செய்திகள் குறித்து ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இளைஞர்கள் பேசியதாக கூறி வௌியிடப்பட்ட வீடியோக்களும் அடிப்படை ஆதாமற்றவை என ரஷ்ய தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயங்கள் குறிப்பு உன்னிப்பாக ஆராய்வதோடு ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவிற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கபோவதில்லை என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் இது குறித்து இலங்கை அரசாங்கம் உதவிகளை கோரும் பட்சத்தில் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.