துருக்கியின் மத்திய பகுதியில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதியதில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தெற்கான இஸ்பர்ட்டா மாகாணத்தில், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத முறையில் இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதின. இதில், ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கினாலும், மற்றொன்று விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து இரண்டாக உடைந்ததாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மோதலின் காரணம் உடனடியாக தெரியவில்லை.